அமெரிக்காவின் நியூயார்க்கில், MRI அறைக்குச் சென்ற 61 வயது நபர், MRI இயந்திரத்தால் இழுக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து, விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனது மனைவிக்கு MRI ஸ்கேன் எடுப்பதற்காக, மனைவியின் அழைப்பின் பேரில், அவருக்கு உதவ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவரை இயந்திரம் வேகமாக இழுத்துள்ளது.
உயிரிழந்த நபர், உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 9 கிலோ எடையிலான உலோக சங்கிலியை இடுப்பில் வைத்திருந்ததால், இயந்திரத்தினுள் இழுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்கமாக MRI ஸ்கேன் எடுக்க செல்லும் நபரை, சோதனை செய்யும் மருத்துவ பணியாளர்கள், அந்த நபர் ஆபரணங்கள் ஏதேனும் அணிந்திருந்தால் அதனை கழட்டிவிட்டு வர சொல்வார்கள்.
ஏனென்றால், MRI இயந்திரம் துல்லியமாக ஸ்கேன் செய்வதற்காக சக்திவாய்ந்த காந்த ஈர்ப்புகளை கொண்டிருக்கும்.
MRI என்பதன் விரிவாக்கம் Magnetic Resonance Imaging. தமிழில் இது, காந்த அதிர்வு அலை வரைவு எனக் கூறப்படுகிறது.
காந்த அதிர்வு அலை வரைவு உதவியுடன் உடல் உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளை துல்லியமாக கண்டறிய முடியும். ஆனால் அடிக்கடி இந்த சோதனையை செய்தால் பாதிப்பு ஏற்படும்.
இதற்குமுன் 2001ல், MRI ஸ்கேனுக்கு சென்ற 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இயந்திரத்தின் காந்த ஈர்ப்பு, ரூமிலிருந்த ஆக்ஸிஜன் டேங்கை அங்குமிங்கும் இழுத்ததில் சிறுவன் தலையில் அடிபட்டு உயிரிழந்தான்.
Explore