நாளுக்கு நாள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுவரும் நிலையில், 1 சவரன் விரைவில் 1 லட்சம் ரூபாயை எட்டிவிடும் எனக் கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை இவ்வாறு தொடர்ந்து ஏறிக்கொண்டிருப்பதால், தங்கம் வாங்குவது என்பது எட்டா கனியாகிவிடுமோ என பாமர மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
சாமானிய மக்களும் தங்க நகையை வாங்க வேண்டும் என்பதற்காக 22 காரட் தங்கத்திற்கு பதிலாக 9 காரட் தங்கம், பரவலாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
9 காரட் தங்க நகைகள் விலை குறைவாக இருந்தாலும், அதனை வாங்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது.
9 காரட் தங்க நகைகள் மீது மக்களுக்கு சந்தேகம் வரக் காரணம், அவற்றை, 22 காரட் தங்க நகைகளை போல மறுவிற்பனை செய்ய முடியமா என்ற கேள்விதான்.
9 காரட் தங்கத்தில் 37.5% தூய தங்கம் உள்ளது. 62.5% மற்ற உலோகம். மேலும் 9 காரட் தங்கத்திற்கும் செய்கூலி, சேதாரம் உள்ளதோடு ஹால்மார்க் தர நிர்ணயமும் உண்டு.
எனவே, ஹால்மார்க் முத்திரை உள்ள 9 காரட் தங்க நகைகளை மறுவிற்பனை செய்யலாம். அதில் உள்ள தூய தங்கத்திற்கான விலை நிச்சயம் கிடைக்கும்.
மறுவிற்பனை செய்யும்போது, நீங்கள் வாங்கிய செய்கூலி, சேதாரம் ஆகியவை பிடிக்கப்படலாம், ஆனால் அதில் உள்ள தங்கத்திற்கு மதிப்பு உண்டு.
Explore