கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம், osteoporosis எனப்படும் எலும்பு பிரச்னையை தடுத்து எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
B வைட்டமின்கள், பாஸ்பரஸ், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்குகிறது.
இது உடலின் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சீர்செய்யவும் உதவுகிறது.
கோழிக்கறி ஒரு குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரி உணவு என்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கோழிக்கறியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகையை தடுக்கிறது.
சிலருக்கு உறக்கத்தை மேம்படுத்தவும் கோழிக்கறி உதவுகிறது.
தோல் நீக்கிய கோழிக்கறியை, சுகாதாரமான முறையில், எண்ணெய் குறைவாக பயன்படுத்தி சமைத்து, தினமும் அளவாக சாப்பிடலாம்.
கோழிக்கறியை எடுத்துக்கொள்ளும்போது கூடவே ஏதேனும் காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
Explore