தேவையான பொருட்கள் : 1 கி. நண்டு, 3 வெங்காயம், 2 தக்காளி, 1 ஸ்பூன் மிளகு,1 ஸ்பூன் மல்லி, 1 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 4 காய்ந்த மிளகாய்,
2 பச்சை மிளகாய், 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 கப் தேங்காய் பூ, 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் & உப்பு.
செய்முறை : கடாயில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் பூவை போட்டு லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இந்த நிலையில், தக்காளியை கடாயில் போட்டு நன்கு கிளறி வதக்கவும். தக்காளி நன்கு மசியும் வரை வேக விடவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்து வைத்துள்ள கலவையை கடாயில் கொட்டி, உப்பு சேர்த்து வதக்கி, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கடாயில் மசாலா கலவை நன்கு கொதிக்கும்போது, சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை போட்டு, 10-15 நிமிடம் வரை வேக விடவும்.
மசாலாவில் தண்ணீர் நன்கு வற்றி, எண்ணெய் பிரிந்து வந்தவுடன், கொத்தமல்லியை தூவி இறக்கினால் நண்டு மசாலா ரெடி.
Explore