பருவகால மாற்றங்களால் ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலை போக்க, வீட்டில் தயாரிக்கப்படும் சிக்கன் சூப் டேஸ்டியான மருந்தாக இருக்கும்.
கோழியில் கார்னோசின் ஊட்டச்சத்து உள்ளது. இது, சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்பு, தொண்டை புண், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.
எனவே மசாலா & மூலிகைகள் கலந்து சமைக்கப்படும் சிக்கன் சூப் பல நோய்களை திறம்பட குணப்படுத்துவதோடு, தடுக்கவும் உதவும்.
சிக்கன் சூப் செய்முறை : 1/4 கி. சிக்கனை கழுவி குக்கரில் போட்டு, அதனுடன் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன் மிளகு பொடி,
1/2 ஸ்பூன் சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கை அளவு, தக்காளி ஒரு கை அளவு & உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் விட வேண்டும்.
விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் 15 நிமிடங்களுக்கு வைத்து அணைத்துவிடவும். பிறகு சிறிய கடாய் ஒன்றில், 1 ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி, சிறிது சோம்பு போட்டு தாளிக்கவும்.
குக்கரை திறந்து தாளிதத்தை கொட்டி, மேலாக கொத்தமல்லியை தூவினால் சுவையான, ஆரோக்கியமான சிக்கன் சூப் தயார்.
காரம் கூடுதலாக தேவைப்பட்டால் மிளகு தூள் தூவியும், புளிப்பு டேஸ்ட் தேவைப்பட்டால் அரை எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்தும் பரிமாறலாம். சூப்பை சூடாக பருகுவது பலனளிக்கும்.