"ராஜ்வாடி லஸ்ஸி" என்பது தயிர் மற்றும் மசாலாப் பொருட்களின் மணம் சேர்ந்த சுவையான பானம்.
தயிர் - 2 கப், ஏலக்காய் - 2, பாதாம் - 10, முந்திரி -10, பிஸ்தா - 5, குங்குமப்பூ - 1 சிட்டிகை & சர்க்கரை - 1 கப் எடுத்துக்கொள்ளவும்.
முதலில் ஏலக்காயை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு, 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இதனுடன் மீதி உள்ள சர்க்கரையை சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகிய நட்ஸ்களை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
தயிரில் ஒரு கப் நீர் சேர்த்து, நன்கு அடித்துக்கொள்ளவும். பின்னர் இதில் குங்குமப்பூ சேர்க்கவும்.
இதனுடன் நட்ஸ், ஏலக்காய்-சர்க்கரை கலவையை சேர்த்து, நன்கு கலக்கினால் "ராஜ்வாடி லஸ்ஸி" ரெடி.
லஸ்ஸியை டம்ப்ளரில் ஊற்றி, லேசாக புதினா தூவி, ஐஸ் க்யூப்களை தேவைக்கு ஏற்ப போட்டு பரிமாறினால் கூலாக குடிக்கலாம்.
Explore