பறவைகளிலேயே அதிக புத்திசாலித்தனம் மற்றும் நினைவுத்திறன் கொண்டது காகம்!
சுய அடையாளம் காணும் ஆற்றல் காகங்களுக்கு உள்ளது. இந்த அறிவாற்றல் மனிதர்களிடம் சிறு வயது முதலே இருக்கிறது.
காகங்கள் முன்னோர்களாக பாவிக்கப்படுகின்றன. எதிர்கால நிகழ்வுகள் அவைகளுக்கு முன்கூட்டியே தெரியும் என சொல்லப்படுகிறது.
காகங்கள், வீட்டின் மாடி, ஜன்னல்களில் அமர்ந்து உணவை வாங்கிச்செல்வது சாதாரண நிகழ்வு. ஆனால் அவை வீட்டிற்குள் நுழைந்தால், கலவையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உங்கள் வீட்டில் நிறைய காகங்கள் கூடி சத்தமாகக் கத்தினால், அது எச்சரிக்கையாகும். குடும்பத்திற்கு பெரிய நெருக்கடி அல்லது ஆபத்து வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாம்.
ஒரு காகம் இன்னொரு காகத்திற்கு உணவு பகிரும் காட்சியினை பார்ப்பது என்பது இனிமையான செயலை குறிக்கின்ற சகுனமாகும்.
இறந்த காகத்தை பார்ப்பது, கெட்ட சகுனமாம். அவ்வாறு பார்த்தால், உடனடியாக சனி பகவான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டுமாம்.
சகுனம் குறித்த தகவல்கள் அனைத்தும் மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே சொல்லப்படுபவை.
Explore