கோடைகாலத்தில் பரவலாக வருவது 'சிக்கன் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் சின்னம்மையே!
இது வைரஸால் பரவக்கூடியது. ஆனால் பயப்படக்கூடிய நோய் அல்ல. நல்ல நோயெதிர்ப்பு சக்தியிருந்தால் அதுவே சரியாகிவிடும்.
இல்லையென்றால் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டால் நலமாகிவிடலாம்.
இது ஒருவருக்கொருவர் நேரடித் தொடர்பு, இருமல், தும்மல் & உடலில் ஏற்படும் கொப்புளத்தின் நீரைத் தொடுவதன் மூலம் பரவும்.
அம்மை நோய் ஏற்பட்டால் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.
உணவில் காரம் மற்றும் எண்ணெய் குறைவாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடலாம்.
அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், தினமும் 2 முறை குளிப்பது அவசியம்.
ஒருவருக்கு ஒரு முறை சின்னம்மை வந்தால் மீண்டும் வராது. சிலருக்கு மட்டுமே இது இரண்டு முறை வரும்.
Explore