மட்டன் கறி தோசை என்பது மதுரை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பிரபலமான ஒரு உணவாகும்.
அசைவப்பிரியர்கள் விரும்பி சாப்பிடும் இந்த தோசையை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்.
செய்முறை : ஆட்டுக்கறியை இருவகைகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு துண்டுகள் மற்றும் கைமாவாக வாங்கிக்கொள்ள வேண்டும்.
சிறு சிறு துண்டுகளாக நறுக்கியதை சுக்காவாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கைமா கறியை மிக்சியில் அரைத்து பேஸ்ட் போல தொக்காக சமைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு கறியையும் ஒன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் தோசை மாவு மற்றும் முட்டையை எடுத்துக்கொண்டு, அடுப்பில் தோசைக்கல்லை காய வைக்க வேண்டும்.
தோசைக்கல் சூடானதும், தோசையை ஊற்ற வேண்டும். ஆனால் தோசையை மெல்லிதாக ஊற்றாமல், மாவை அடர்த்தியாக ஊற்ற வேண்டும்.
தோசை மாவின்மீது முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி, அதன் மீது ஆட்டுக்கறி மசாலாவை முழுவதும் பரப்பிவிட்டு, தோசையை திருப்பிப்போட வேண்டும்.
தோசையை திருப்பிப்போட்டு 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் மதுரை ஸ்டைலில் சுவையான மட்டன் கறி தோசை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தனியாக எதுவும் வேண்டாம்.
Explore