கருவாட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறதாம்.
கருவாட்டில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இதயம், மூளை மற்றும் பார்வை செயல்பாட்டை மேம்படுத்துகிறதாம்.
கருவாட்டில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்-டி சத்துக்கள், எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்குகிறதாம்.
சில வகையான கருவாடுகள், பெண்களின் கருப்பை மற்றும் சினைப்பை பிரச்சனைகளை தீர்க்க உதவுவதுடன், பிரசவத்திற்கு பின் பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறதாம்.
புரதச்சத்தின் சிறந்த மூலமாக கருவாடு இருப்பதால், தசைகளின் வளர்ச்சி மற்றும் அதில் உள்ள பழுதுகளை சரிபார்க்க பயன்படுமாம்.
100 கிராம் கருவாட்டில், 50-60 கிராம் புரதம், 500-900 மிகி கால்சியம், 3 கிராம் ஒமேகா-3, 5-10 மிகி இரும்புச்சத்து உள்ளிட்டவை உள்ளன.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த கருவாட்டை, வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
Explore