ரேபிஸ் நோய் என்பது ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இது நாய் கடிப்பதால் மட்டுமே ஏற்படுவதில்லை.
ரேபிஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸ் எச்சில் மூலமாகப் பரவுகிறது. பூனை, குரங்கு, மாடு, வௌவால், குதிரை போன்ற பிற பாலூட்டிகள் கடித்தாலும் ஏற்படும்.
உடலின் நரம்பு மண்டலத்தில் கலக்கும் வைரஸ் கிருமி, நேராக மூளையைச் சென்று தாக்குகிறது.
எந்த விலங்கில் இருந்து ரேபிஸ் நோய் பரவினாலும் அதற்கான அறிகுறிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
காய்ச்சல், தலைவலியில் தொடங்கி தண்ணீரைக் கண்டாலே பயப்படுவது வரை அறிகுறிகள் தென்படும்.
நிபுணர்கள் கூற்றுப்படி, இந்த நோயால் தொண்டைப் பகுதியிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணவு, தண்ணீரை விழுங்கவே முடியாது.
அதன் காரணமாக, உடலிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும்.
மதுரையில் அண்மையில் பூனைக் கடிக்கு ஆளான 25 வயது இளைஞர் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
Explore