ஆந்திராவின் புதிமடகா கடற்பகுதியில் அண்மையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த எரய்யா என்ற மீனவரை, மீன் ஒன்று கடலுக்குள் இழுத்து சென்றது.
வலையில் சிக்கிய மீனை படகுக்குள் இழுத்தபோது, அது, மீனவரை ஆக்ரோஷமாகத் தாக்கி கடலில் தள்ளி இழுத்து சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் மீனவர் எரய்யா உயிரிழந்தார். இதேபோன்ற சம்பவங்கள் (மனிதனை மீன்கள் கடலுக்குள் இழுத்துச்செல்வது) ஏற்கனவே நடந்துள்ளனவாம்.
ஆந்திராவில் மனிதனையே கடலுக்குள் இழுத்துச்சென்ற அந்த மீன், 100 கிலோவுக்கும் மேல் எடை கொண்ட கருப்பு மார்லின் மீன்.
இஸ்டியோபோரிடே குடும்பத்தை சேர்ந்த மார்லின் மீன்கள், நீளமான உடலமைப்பும், கூரான மூக்கும் கொண்டவை.
வேகமாக நீந்தும் திறன் கொண்ட இவை, நீல மார்லின், கருப்பு மார்லின், கோடிட்ட மார்லின் உள்ளிட்ட வகைகளில் உள்ளன.
அளவில் பெரியது மட்டுமன்றி வலிமையானதாகவும் இருக்கும் மார்லின் மீன்கள், அதிபட்சமாக 5 மீட்டர் நீளமும், 800 கிலோ வரை எடையும் கொண்டிருக்குமாம்.
மீன்கள், ஆக்டோபஸ், ஸ்க்விட் போன்றவற்றை உண்ணும் மார்லின் மீன்கள், 100 கிலோ எடை இருப்பது என்பது சர்வ சாதாரணமாம்.
Explore