தவறாமல் பல் துலக்க வேண்டும். தினமும் இருமுறை பல் துலக்குவது, பற்களில் உள்ள அழுக்குகளை நீக்கி, வெண்மையாக வைக்க உதவும்.
பற்களுக்கு இடையில் உள்ள அழுக்குகளை நீக்க, தினமும் ஒரு முறையாவது, floss, அதாவது பல் துலக்கும் கயிறை பயன்படுத்த வேண்டும்.
உணவு சாப்பிட்ட பின் வாயைக் கொப்பளித்து துப்புவது, பற்களில் ஒட்டியிருக்கும் உணவு துகள்களை நீக்கும்.
சர்க்கரை மற்றும் அமில உணவுகள், பற்களில் உள்ள எனாமலை சேதப்படுத்தும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய்யில் வாய் கொப்பளிப்பது, பற்களை வெண்மையாக்கும்.
ஸ்ட்ராபெர்ரியை மசித்து, பேக்கிங் சோடாவுடன் கலந்து, பற்களில் தடவி 3 நிமிடங்கள் கழித்து துலக்கினால், பற்கள் வெண்மையாகுமாம்.
பற்களில் கறை படிவதற்கு, புகைபிடிக்கும் பழக்கம் முக்கிய காரணமாக உள்ளதால், புகைபிடிப்பதை தவிர்ப்பது நலம்.
காபி, டீ, போன்ற நிறமி உணவுப் பொருட்களைக் குறைத்து, தண்ணீர் அதிகம் குடிப்பது, பற்களில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும்.
பற்களில் சொத்தை மற்றும் அதிக கறை படிந்திருந்தால், பல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
Explore