திருமணம் செய்து செல்லும் தங்கள் மகளுக்கு, பெற்றோர், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி அனுப்புவது மிகவும் முக்கியம்.
அவளுடைய வாழ்க்கைப் பாதையில் புதிய தொடக்கத்திற்கு அவள் தயாராகும் போது, அவளுக்கு ஆதரவாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
கணவன் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவும் வழிகளை கற்றுக்கொடுப்பது அவசியம்.
திருமண வாழ்க்கையின் சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை விளக்கிக் கூறுங்கள்.
விட்டுக்கொடுத்து செல்வதுதான் வாழ்க்கை என்று புரிய வையுங்கள். அதேநேரம், அனைத்திற்கும் எல்லை உண்டு என்றும், அத்துமீறல்களை உதறி செல்லலாம் என்றும் தெளிவுப்படுத்துங்கள்.
திருமண வாழ்க்கையில் அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், நீங்கள் எப்போதும் அவளுக்கு துணையாக இருப்பீர்கள் என்பதை எடுத்துக்கூறுங்கள்.
"கடினமான நேரங்களில் தைரியமாக இரு. எது நடந்தாலும், எங்கள் அன்பையும், ஆதரவையும் எப்போதும் நீ பெறுவாய்" என உறுதி அளியுங்கள்.
Explore