சமையலில் கைதேர்ந்தவர்கள், வீட்டிலேயே குலாப் ஜாமுன் மாவு தயாரித்து குலாப் ஜாமுன் செய்வார்கள்.
ஆனால், சமையல் தெரியாதவர்களும்கூட, கடைகளில் கிடைக்கும் Instant குலாப் ஜாமுன் Mix பாக்கெட்டுகளை வாங்கி ஈசியாக செய்வது எப்படி என பார்ப்போம்.
மாவு பாக்கெட்டிலேயே, மாவை எவ்வளவு தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்? பொரித்த குலாப் ஜாமுனை, எந்தளவு சர்க்கரை ஜீராவில் போட வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.
பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த தகவல்களை சரியாக பின்பற்றினாலே, முதல்முறை செய்பவர்களும்கூட குலாப் ஜாமுனை சூப்பராக செய்துவிடலாம்.
ஆனால், விரிசல்விடாத.. சாஃப்டான... குண்டு குண்டு குலாப் ஜாமுன் கிடைக்க சில டிப்ஸ்கள் இருக்கின்றன.
குலாப் ஜாமுனுக்கு மாவு பிசையும் போது, அதனை அழுத்தி பிசையக்கூடாது. அதேபோல் மாவை உருண்டை பிடிக்கும்போதும் அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக பிடிக்க வேண்டும்.
குலாப் ஜாமுன் உருண்டைகளை நெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். உருண்டைகளை பொரிக்கும்போது ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயிலிருந்து பொரித்தெடுக்கும் குலாப் ஜாமுன் உருண்டைகளை உடனடியாக ஜீராவில் போட்டு, 15 நிமிடங்கள் ஊற வைத்து சாப்பிட்டால், செம டேஸ்டியாக இருக்கும்.
Explore