பெண்கள் தங்களுக்கு பிடித்த உடைகளை அணிவது என்பது அவர்களின் ஆடை சுதந்திரம். அதில் யாரும் கருத்து சொல்வதற்கில்லை.
ஆனால் பெண்கள், தங்களுக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதைக் கடந்து, நம் உடல் வாகுக்கு அந்த உடை பொருத்தமாக, சௌகரியமாக இருக்குமா என்று யோசித்து அணிந்தால் சிறப்பாக இருக்கும்.
அதிலும் ஜீன்ஸ் பேண்ட் அணிய விரும்பும் பெண்கள், அதனை, தங்களின் உயரம், உடல் அமைப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டுதான் தேர்வு செய்ய வேண்டும்.
தோள்பட்டை, மார்பு மற்றும் இடுப்பு அளவை விட குறுகிய வெய்ஸ்ட் பகுதி கொண்டிருக்கும் பெண்களுக்கு, அனைத்து வகையான ஜீன்ஸ் பேண்டுகளும் பொருந்தும்.
உயரம் குறைந்து உடல் சற்றுப் பருமனாகத் தெரிபவர்கள், ஹை-வெய்ஸ்ட் அல்லது மிட்-வெய்ஸ்ட் ஜீன்ஸைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்கு லூஸ் ஃபிட்டிங் ஜீன்ஸ்கள் சரியான சாய்ஸ்.
மேலும், உடல் சற்றுப் பருமனாக இருக்கும் பெண்கள், தங்களை நேர்த்தியாக காட்ட, ஸ்ட்ரெய்ட் லெக் ஜீன்ஸ் அணியலாம். இது கால்களையும் அழகாகக் காண்பிக்கும்.
உடல் சற்றுப் பருமனாக இருப்பதுடன் பெரிய இடுப்புப்பகுதி கொண்டிருக்கும் பெண்களுக்கு, வைடு-லெக்டு ஜீன்ஸ் பேண்டுகள் பொருத்தமாக இருக்கும்.
பெரிய இடுப்புப்பகுதி கொண்டுள்ள பெண்களின் இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு, வைடு-லெக்டு ஜீன்ஸ் கச்சிதமாகப் பொருந்தும். தொடைப்பகுதியில் இந்த ஜீன்ஸ் தளர்வாக இருக்கும்.