உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் பெரு வெள்ளத்திற்கு காரணம் Cloud Burst. தமிழில் "மேக வெடிப்பு". மேக வெடிப்பா....? மேகம் எப்படி வெடிக்கும் என்று அனைவருக்கும் கேள்வி எழும்.
மேக வெடிப்பு என்றால் என்ன? அதை முன்கூட்டியே கணிக்க முடியாதா? எந்த காலத்தில் மேக வெடிப்பு ஏற்படும்? அனைத்து இடங்களிலும் மேக வெடிப்பு ஏற்படுமா? பார்க்கலாம் வாங்க...
1 முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தால் அதனை மேக வெடிப்பு நிகழ்வு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
பருவமழையின் போதுதான் மேகவெடிப்புகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. சில நேரங்களில் பருவமழைக்கு முன்பு ஏற்படலாம். அதனால்தான், வட இந்தியாவில் மே முதல் ஆகஸ்டு மாதங்களில் மேகவெடிப்புகள் ஏற்படுகின்றன.
பெரிய பகுதிகளில் மிக கனமழை பெய்வதை ரேடார் மூலம் கணிக்கும் வானிலை ஆய்வு மையம், மேகவெடிப்பை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை செய்யலாமே என்று நமக்கு தோன்றும்.
ஆனால், சிறிய பகுதிகளில் ஏற்படும் மேக வெடிப்பு, எந்த குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் என்பதை கணிப்பது சிரமம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இருந்தபோதிலும், அடர்ந்த ரேடார் நெட்வொர்க் மற்றும் அதிநவீன வானிலை முன்னறிவிப்பு அமைப்புகள் மூலம் மேக வெடிப்புகளை கணிக்கலாம் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேக வெடிப்புகள் அனைத்து இடங்களிலும் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், மலைப் பகுதிகளிலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன. காரணம், மலைப் பகுதிகள், மேகம் மேல் எழும்பி கனமழையை உருவாக்க சாதகமாக இருக்கின்றன.
Explore