ஆயுர்வேத முறைப்படி இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் சில துளிகள் எண்ணெய் வைப்பதால், நிறைய பலன்கள் கிடைக்கின்றனவாம்.
தொப்புள் மற்றும் தொப்புளைச் சுற்றியுள்ள பகுதியிலும் எண்ணெய் வைத்து மெதுவாக மசாஜ் செய்யலாம். உடல் பிரச்சனைகளுக்கு ஏற்ப வெவ்வேறு எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
உடலின் பல உறுப்புகளுடன் தொப்புள் இணைக்கப்பட்டுள்ளதால், அதில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்.
பெண்களின் தொப்புள் கர்ப்பப்பையில் அம்ப்ளிக்கல் கார்ட் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள், நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யை தொப்புளில் வைத்து மசாஜ் செய்தால் மாதவிடாய் வயிற்றுவலி குறையுமாம்.
எள் எண்ணெய்யை தொப்புளில் வைத்தால் வாயு தொல்லை நீங்குமாம். தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால், குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருமாம்.
கடுகு எண்ணெய்யை தொப்புளில் வைத்தால் வறண்ட சருமம் மற்றும் வறண்ட உதடுகளை மென்மையாக்கி, முகப்பொலிவை கூட்டுமாம்.
வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவது முகப்பரு மற்றும் அலர்ஜி பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லதாம்.
எண்ணெயைத் தடவும்போது வலி ஏற்பட்டால், உடனடியாக நிறுத்திவிட வேண்டுமாம். சந்தேகம் இருந்தால், தொப்புளில் எண்ணெய் விடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
Explore