புதிய மொழியை கற்பது என்பது நமது மொழியாற்றலை அதிகரிக்க உதவும்.
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை முதலில் கற்றுக்கொண்டு, அதனை தினசரி பேச்சில் பயன்படுத்துங்கள். அதில் வாக்கியங்கள் அமைக்க பழகுங்கள்.
ஒரு மொழியை அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக பேசக் கற்றுக்கொள்ள திரைப்படங்கள்தான் சிறந்த தேர்வு.
முதலில் அந்த மொழி படங்களை சப்-டைட்டிலுடன் பாருங்கள். பின்னர் ஆடியோ ஒன்லி மோடில் பாருங்கள்.
நம் மொழியை தவிர்த்துவிட்டு, கற்கும் புதிய மொழியில் யோசனை செய்ய முயற்சி செய்யுங்கள்.
புதிய மொழியில் எழுத தொடங்குங்கள். எது எழுதுவதாக இருந்தாலும், அந்த மொழியிலேயே எழுதுங்கள். அந்த மொழி புத்தகங்களை வாசியுங்கள்.
நாம் கற்கும் மொழி தெரிந்தவரிடம், அதே மொழியில் உரையாடுங்கள். தவறாக பேசிவிடுவோமோ என்று கூச்சப்படாதீர்கள்.
Explore