1/4 கி. காளான், 1/4 கி. முட்டைகோஸ், 1/4 கி. வெங்காயம், தக்காளி - 1, 100 கி. மைதா, 100 கி. கான் ஃப்ளார், இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 10 பல், 1/2 லெமன், மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்,
(மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், சோம்பு தூள், மல்லித்தூள் ஆகியவை தலா 1/4 ஸ்பூன்), (தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவை தலா 1 ஸ்பூன்), கறிவேப்பிலை, எண்ணெய் & உப்பு எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை : காளாளை சுத்தம் செய்து நறுக்கி ஒரு பவுலில் வைத்துக்கொண்டு, அதேபோன்று முட்டைகோஸை கழுவி பொடியாக நறுக்கி அதில் போட்டுக்கொள்ளவும்.
அதனுடன், மைதா மாவு, சோள மாவு, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், லெமன் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பின்னர் அதனை சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி வைத்துக்கொள்ளவும்.
கடாய் ஒன்றில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை லேசாக வதக்கி, அதனுடன், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
அதில் 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கவும். பிறகு லேசாக கொத்தமல்லி தூவி, 1 தக்காளியை பேஸ்டாக அரைத்து கலக்கவும்.
இந்த நிலையில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, கரம் மசாலா, மிளகு தூள், சோம்பு தூள், மல்லித்தூள் ஆகியவற்றை தலா 1/4 ஸ்பூன் சேர்த்து, 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
இப்போது தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றை தலா 1 ஸ்பூன் சேர்த்து, 1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, பொரித்து வைத்துள்ள முட்டைகோஸ் காளானை போட்டு 5 நிமிடம் கிளறவும்.