தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி போன்றதுதான் நாவல் பழ சட்னியும்.
இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்டவற்றுடன் இந்த நாவல் பழ சட்னியை தொட்டுக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் : 1 கப் நாவல் பழம், 2 பச்சை மிளகாய், 1/4 கப் தேங்காய், 2 பல் பூண்டு, 1/2 எலுமிச்சை பழச்சாறு அல்லது சிறிய கோலிகுண்டு அளவு புளி & தேவையான அளவு உப்பு.
செய்முறை : நாவல் பழத்தை கழுவிவிட்டு கொட்டைகளை நீக்கி, பழத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
நாவல் பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்தால் சட்னி ரெடி.
இதனை அப்படியே பரிமாறலாம். வேண்டுமென்றால், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகிய தாளிதத்துடனும் பரிமாறலாம்.
இந்த சட்னியில் தேங்காய் வேண்டாம் என்று நினைப்பவர்கள், நாவல் பழம், பச்சை மிளகாய், புளி ஆகிய மூன்றை மட்டும் சேர்த்து சட்னி அரைத்துக்கொள்ளலாம்.
நாவல் பழத்தில் சி, பி வைட்டமின்களுடன், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்களும் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.