புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமை, தளிகை என்ற படையலிட்டு பெருமாளை வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அந்தவகையில் படையல் உணவுகளை பார்ப்போம்.
சர்க்கரைப் பொங்கல்: பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு ஆகியவை சேர்த்து செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் ஒரு முக்கியப் பிரசாதம்.
கலந்த சாத வகைகள்: பெருமாளுக்கு பிக்‌ஷை வாங்கி வந்த அரிசியில் சாதம் வடித்து, புளியோதரை, எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட கலந்த சாதங்கள் செய்யப்படும்.
மாவிளக்கு: அரிசி மாவு, வெல்லம் மற்றும் நெய் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய பிரசாதம்தான் மாவிளக்கு.
வடை: பருப்பு வடை, உளுந்து வடை போன்றவையும் தளிகையில் இடம்பெறும்.
கொழுக்கட்டை: இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டைகள் தளிகையில் படைக்கப்படும்.
முறுக்கு: புரட்டாசி மாதத்தில் முறுக்குகள் படையலாகப் படைக்கப்படுவது வழக்கம்.
படையலிடும் முறை: பெருமாளின் திருமுகம் போலவே படைப்பு பிரசாதங்களை இலையில் அலங்கரித்து வைத்து வணங்குவது தனிச்சிறப்பு.
Explore