அசைவப் பிரியர்களுக்கு இட்லிக்கு தொட்டக்கொள்ள மிகவும் பிடித்தது கறி குழம்பாகத்தான் இருக்கும்!
இதுவே தட்டில் இட்லி வைத்து, குழம்பை தனியாக ஊற்றி சாப்பிடாமல், இட்லிக்கு உள்ளேயே நமக்கு பிடித்த கறி இருந்தால் எப்படி இருக்கும்?
அதற்கு பெயர்தான் கறி இட்லி. Non-Veg பிரியர்களுக்கு அதுதான் சொர்க்கம்! அப்படிப்பட்ட கறி இட்லியை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்.
வீட்டில் வழக்கமாக கறி வறுப்பதுபோல, சிக்கனோ, மட்டனோ வறுத்துக்கொள்ளுங்கள். ஆனால் கறியை, எலும்பு நீக்கி சிறுசிறு துண்டுகளாக, ட்ரையாக வறுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது இட்லி தட்டை எடுத்து, வழக்கமாக இட்லிக்கு ஊற்றுவதுபோல, குழியில் முழுவதும் மாவை ஊற்றாமல், முதலில் கொஞ்சம் மாவை ஊற்ற வேண்டும்.
அதற்கு மேல், நாம் செய்து வைத்துள்ள கறி கலவையை வைத்து, அதன் மீது மீண்டும் இட்லி மாவை ஊற்றி வைக்க வேண்டும்.
பின்னர், வழக்கமாக இட்லியை வேகவைப்பது போல வேகவைத்து எடுத்தால், நினைக்கும்போதே நாவில் எச்சிலூறும் அளவுக்கு சுவையான "கறி இட்லி" தயார்.
இந்த இட்லியை அப்படியே புட்டு சாப்பிடலாம். முரட்டுத்தனமான Non-Veg பிரியர்கள், இட்லிக்கு மேலே மீண்டும் கறிக்குழம்பு ஊற்றி, பிசைந்தும் ஒரு கட்டு கட்டலாம்.