சைட் அடிப்பது, இனக்கவர்ச்சி மற்றும் காதலின்போது முகப்பரு வருவதாக கிண்டலாக பேச கேட்டிருப்போம்.
உண்மை என்னவென்றால், முகப்பரு வருவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று ஹார்மோன் மாற்றங்கள்.
காதல் ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவம். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மன அழுத்தம் ஹார்மோன் அளவை பாதிக்கும். இதனால் முகப்பரு ஏற்படலாம்.
மேலும், காதலில் மூழ்கியிருக்கும்போது, பலர் தங்கள் சரும பராமரிப்பில் கவனம் செலுத்தாமல் விடலாம். இதுவும் முகப்பருவை அதிகரிக்கலாம்.
இதனை தவிர்த்து, சருமத்தில் ஏற்படும் அதிக எண்ணெய் உற்பத்தி, பாக்டீரியா தொற்று, வயிற்றில் கழிவுகள் தேங்குவது...
சில மருந்துகள், உணவுகள், அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்டவை முகப்பருவிற்கு காரணங்களாக உள்ளன.
பொதுவாக, முகப்பரு வராமல் தடுக்க, மன அழுத்தத்தைக் குறைத்து, சருமத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.
சத்தான ஃபைபர் நிறைந்த உணவுகள், போதுமான உறக்கம், சருமத்திற்கு ஏற்ற ஈரப்பதமூட்டி உள்ளிட்டவை முகப்பருவை தடுக்க உதவும்.
முகப்பரு பிரச்சனை அதிகமாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
Explore