கடின வேலைகளைச் செய்யும்போதும் அதிக ஆக்ஸிஜன் தேவைப்படும்போதும், நாம், மூக்கு மட்டுமல்லாமல் வாய் வழியாகவும் சுவாசிப்போம்.
அதனால்தான், தீவிர விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள், வாய் வழியாக மூச்சு வாங்குவதை பார்க்கலாம். ஆனால், தூக்கத்தின்போது, நம் கண்களைப் போலவே வாயும் மூடியிருக்கும்.
காரணம், தூக்கம் என்ற நிம்மதியான நிலையில் மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். வேகமாக சுவாசிக்க வேண்டிய அவசியமில்லாததால் வாய் மூடியிருக்கும்.
ஆனால் தூங்கும்போதும் பலருக்கு வாய் திறந்து இருக்கும். வாயை திறந்து தூங்குவதே வழக்கமாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்.
இவ்வாறு தூங்குவது, ஏதேனும் நோயின் அறிகுறியா என அச்சம் இருக்கும் நிலையில், எந்த நோயின் அறிகுறியும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தூக்கப்பிரிவு நிபுணர் கூறியுள்ளார்.
வாயை திறந்துபடி தூங்குவது பொதுவானது என்றும், பலரும் இப்படித்தான் தூங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூக்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது மூக்கு அடைத்திருந்தாலோ, நாம் வாய் வழியாக சுவாசிப்போமே தவிர, இது நோய் அல்ல என்று கூறியுள்ளார்.