பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கும் பெரும்பான்மையானவர்கள், அந்த பாட்டில் மூடியின் நிறத்தை கவனித்திருப்போமா என்பது சந்தேகமே.
ஒவ்வொரு குடிநீர் பாட்டிலின் மூடியின் நிறமும், அந்த பாட்டிலில் உள்ள தண்ணீரைப் பற்றிய தகவலை குறிக்கிறது.
நீல நிற மூடி : இயற்கை நீரூற்றில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் என்பதை இந்த மூடி நிறம் குறிக்கிறது. இதில் நிறைய மினரல்கள் இருக்கிறது என்று அர்த்தம்.
பச்சை நிற மூடி : இந்த பாட்டில் நீரை குடித்தால் ஒருவிதமான டேஸ்ட்டை உணரலாம். நீரின் சுவையை அதிகரிக்க, இதில் சுவையூட்டி சேர்க்கப்பட்டுள்ளது என அர்த்தம். இதுவும் பாதுகாப்பான நீரே!
வெள்ளை நிற மூடி : மெஷினில் சுத்திகரிக்கப்பட்ட நீர் என்று அர்த்தம். அதாவது Reverse osmosis (RO) முறையில் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர்.
சிவப்பு நிற மூடி : எலெக்ட்ரோலைட் சேர்க்கப்பட்ட நீரைக் குறிக்கிறது. இது உடலுக்கு நீர்ச்சத்தை மேம்படுத்த உதவுகிறது.
கருப்பு நிற மூடி : இந்த தண்ணீர் அல்கலைன் நீர் எனப்படுகிறது. இதில் PH (Power of Hydrogen) லெவல் அதிகம். உடலுக்கு இது மிகவும் நல்லது என்பதால் விலை அதிகம். நிறைய celebrities இந்த நீரை குடிக்கின்றனர்.
மஞ்சள் நிற மூடி : வைட்டமின் செறிவூட்டப்பட்ட குடிநீர். இதில் மினரல்களும் அதிகம் என்பதால், இந்த தண்ணீரும் சற்று விலை அதிகமே.