சர்ச்சை கருத்துகளுக்கு பெயர்போன கங்கனா ரனாவத், தற்போது ஆண் நடிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாலிவுட்டில் பெரும்பாலான ஆண் நடிகர்கள் அநாகரீகமானவர்கள் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நடிகர்களால் பாதிப்புக்கு ஆளாகும் வகையில், தான் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.
பல நடிகர்களுடன் நடித்துள்ள தான், அவர்களின் பாலியல் தொல்லையை பற்றி மட்டும் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்புக்கு நடிகர்கள் மிகவும் தாமதமாக வருவார்கள். நடிகைகளுக்கு சிறிய வேன் மட்டுமே கொடுக்க அனுமதிப்பார்கள்.
நடிகைகளிடம் மோசமாக நடந்து கொள்வார்கள். நடிகைகளை கீழ்த்தரமாக நடத்துவதுடன், ஓரங்கட்டவும் செய்வார்கள்.
லிவ் இன் உறவு குறித்து பேசியுள்ள கங்கனா, ஆண்கள் வேட்டைக்காரர்கள் என்றும், பெண்களை கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத், பா.ஜ.க சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்.பியாக இருக்கிறார்.
Explore