ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!
தான், 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இன்னும் 3 மாதத்தில் குழந்தை பிறந்துவிடும் எனவும் ஜாய் கிரிசில்டா தகவல்.
திரையுலக பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையல்தான் அரங்கேறும்.
ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஜாய் கிரிசில்டாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஓர் ஆண் குழந்தையும் உள்ளது.
2018ல் ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் உடன் திருமணம் நடைபெற்று பின்னர் விவாகரத்து ஆனது.
விஜய்யின் ஜில்லா, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் ஜாய்.
கிரிசில்டாவை கரம்பிடித்துள்ள ரங்கராஜ், முதல் மனைவியை விவாகரத்து செய்தாரா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Explore