பார்வை குறைபாடு சிகிச்சையில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளனர்.
"சென்டர் ஃபார் ஐ ரிசர்ச் ஆஸ்திரேலியா"வில் உள்ள ஆய்வாளர்கள் புதிய ஜீன் சிகிச்சையை கண்டறிந்துள்ளனர்.
சிறப்பு ஜீன்களை கண்களில் செலுத்தி, ரெட்டினாவில் உள்ள ஸ்டெம் செல்களை தூண்டுவதன் மூலம், சேதமடைந்த ஃபோட்டோ ரிசெப்டர் செல்களை மீண்டும் உருவாக்க முடியுமாம்.
ஃபிரான்சில் 58 வயது பார்வையற்ற நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆப்டோஜெனெடிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அவரின் ஒருபகுதி பார்வை மீட்கப்பட்டுள்ளது.
சிறப்பு புரோட்டீனை ரெட்டினா செல்களில் செலுத்தியதால், அந்த செல்கள் ஒளியைக் காணக்கூடியவையாக மாறியுள்ளன.
சிறப்பு கண்ணாடியின் உதவியுடன், அந்த நபர் பொருட்களின் இருப்பிடத்தை அடையாளம் கண்டதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
புதிய ஜீன் சிகிச்சையால் பார்வையற்றோருக்கும் எதிர்காலத்தில் பார்வை கிடைக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Explore