பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியானது முடிவுக்குவரும் இறுதி நிலை 'மெனோபாஸ்' எனப்படுகிறது.
உலகம் முழுவதிலும் என்று எடுத்துக்கொண்டால், பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 45 முதல் 55.
ஆசிய பெண்களின் மெனோபாஸ் வயது, கிட்டதட்ட 51 என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தியாவில் 51 என்பதே சராசரி மெனோபாஸ் வயது.
அம்மாவுக்கு எப்போது மெனோபாஸ் வந்ததோ, கிட்டதட்ட மகளுக்கும் அதே காலகட்டத்தில் மெனோபாஸ் ஏற்படலாம்.
குழந்தை இல்லாதவர்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், 2, 3 குழந்தைகள் உள்ளவர்களுக்கு சற்று தாமதமாகவும் வாய்ப்பு இருக்கிறது.
சூடான ஃப்ளாஷ்கள், அதாவது மார்பிலிருந்து முகம்வரை ஒருவித எரியும் உணர்வு, வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்ந்து இடுப்பு பெருத்துபோதல்...
இரவு வியர்வை மற்றும் தூக்கமின்மை, சீரற்ற மாதவிடாய், உணர்ச்சி மாற்றங்கள், யோனி வறட்சி, தலைவலி, தொடர் உடல் சோர்வு...
மறதி, மூட்டு வலிகள், உடல் வடிவத்தில் மாற்றம், படபடப்பு உள்ளிட்டவை மெனோபாஸின் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.
Explore