முருங்கை கீரை - 1/2 கட்டு, பூண்டு - 4 பற்கள், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி...
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர் - 2 டம்ளர், உப்பு - தேவைக்கேற்ப.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் முருங்கை கீரையை சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் பூண்டு, மஞ்சள் தூள், மிளகு தூள், சீரகத் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்
15 நிமிடங்களில் சூப் கொதித்ததும் அடுப்பை அணைத்து, அதனை நன்கு வடிகட்டி, தேவைப்பட்டால் கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
முருங்கை கீரை சூப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெயில் காலத்திற்கு முருங்கை கீரை சூப் சிறந்த தேர்வு. இது உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
Explore