Fatty Liver என்னும் கொழுப்பு கல்லீரல் பொதுவாக ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகளை காட்டுவதில்லை. ஆனால், நோய் அதிகரிக்கும்போது அறிகுறிகள் தெரியும்.
சோர்வு, பலவீனம் மற்றும் வயிற்றின் மேல் வலது பக்கத்திலோ அல்லது அடிவயிற்றிலோ வலி, வீக்கம் இருக்கலாம்.
குமட்டல், பசியின்மை, தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாதல், இருண்ட சிறுநீர் மற்றும் தோல் அரிப்பு போன்றவை ஏற்படலாம்.
அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெறுவது மிகவும் முக்கியம்.
முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் Fatty Liver-ஐ தடுக்கலாம். ஒருவேளை Fatty Liver பிரச்சனை வந்துவிட்டால், மருத்துவ சிகிச்சையுடன் இயற்கை வழிமுறைகளை பின்பற்றி சரி செய்யலாம்.
இயற்கையான முறையில் Fatty Liver பிரச்சனைக்கு தீர்வு காண, காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் என சீரான ஆரோக்கியமான உணவு முறை அவசியம்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரிக்க வேண்டும்.
மதுப்பழக்கம் உள்ளவர்கள், முற்றிலும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.