நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தற்போது தனியாகவே வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
மேலும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபாவை, பொது இடங்களில் மட்டுமே விஜய் சந்திப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
கிரகப்பிரவேசத்தில், எஸ்.ஏ.சியும், ஷோபாவும் உறவினர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்தளித்துள்ளனர்.
ஆனால், கிரகப்பிரவேசத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை.
விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன், மகள் திவ்யா சாஷா ஆகியோரும் பங்கேற்கவில்லை.
எத்தனை பேர் வீட்டிற்கு வந்திருந்தாலும், மகன், மருமகள், பேரக்குழந்தைகள் வந்ததுபோல ஆகுமா? என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Explore