கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் "நுங்கு இளநீர் நன்னாரி ஜூஸ்" செய்வது எப்படி என பார்க்கலாம்.
நுங்கு - தோல் நீக்கியது 5, இளநீர் - 1 டம்ப்ளர், நன்னாரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.
முதலில் மிக்ஸி ஜாரில் நுங்கை போட்டு நன்னாரி சிரப் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன், அரை டம்ப்ளர் இளநீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.
இந்த கலவையை, மீதமுள்ள இளநீருடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் நமக்கு தேவையான அளவு இனிப்புக்கு சர்க்கரையை சேர்த்தால் ஃப்ரெஷ் நுங்கு ஜூஸ் ரெடி.
இதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறினால் குடிப்பதற்கு இதமாக கூலாக இருக்கும்.
Explore