80, 90 காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் கண்ணழகி மாதவி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாதவி.
ராஜபார்வை படத்தில் மாதவியை வர்ணித்து கமல்ஹாசன் பாடும் "அழகே அழகு தேவதை" பாடல், மாதவிக்காகவே பாடப்பட்டது போல் இருக்கும்!
அன்றைய காலகட்டத்தில் நடிகை மாதவியின் கண்ணழகுக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 100க்கும் மேற்பட்ட படங்களில் மாதவி ஹீரோயினாக நடித்துள்ளார்.
1996ல் திருமணம் செய்துகொண்ட மாதவி, சினிமாவை விட்டு மொத்தமாக விலகி கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் மாதவி, தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
மாதவியின் 3 மகள்களும் அம்மாவைப் போலவே அழகில் குறைவில்லாதவர்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Explore