A, B, O, AB, RH போன்ற ரத்த வகைகள் நமக்கு தெரியும். இதனைத் தவிர்த்து, சில அரிய ரத்த வகைகளும் உள்ளன.
அதுபோன்று இந்தியாவில் கிரிப் (CRIB) என்ற புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதய அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்ட பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த ரத்த வகை இருப்பது தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படும் என்பதால், குடும்பத்தினரிடம் சோதனை செய்யப்பட்டதில், அப்பெண்ணின் ரத்தம் யாருடனும் ஒத்துபோகவில்லை.
இதனால், அவரது ரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டதில், அவருக்கு இருப்பது புதிய வகை ரத்தம் என்று தெரியவந்தது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே அந்த ரத்த வகை வேறு யாருக்குமே இல்லையாம். அந்த பெண்ணுக்கு மட்டுமே CRIB வகை ரத்தம் உள்ளது.
அப்பெண்ணுக்கு வேறு யாரிடமும் ரத்த தானம் பெற முடியாது. அப்படியென்றால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது ரத்தம் தேவைப்பட்டால், என்ன செய்வார்கள்?
அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் சொந்த ரத்தத்தை மருத்துவர் சேகரிப்பார். இதனால் அவசரநிலை ஏற்பட்டால், நோயாளிக்கு அதே ரத்தம் செலுத்தப்படும்.
Explore