பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் கர்ப்பப்பையை பாதிக்கும் பிரச்சனை.
சீரற்ற மாதவிடாய், முகப்பரு, உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, கூடுதல் உடல் எடை, கருவுறுதல் சிக்கல்கள் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள்.
இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன் (ஆண் ஹார்மோன்கள்) அளவுகள் அதிகரிப்பது PCOS பிரச்சனைக்கான முக்கிய காரணிகள்.
உலகம் முழுவதும் 10 சதவீத பெண்கள் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம், PCOS பிரச்சனையை தவிர்க்கலாம்.
மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சில மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யலாம்.
திருமணமான பெண்கள், PCOS பிரச்சனையால் குழந்தைப்பேறு காலதாமதமானால், கருவுறுதல் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
PCOS அறிகுறிகள் இருப்பவர்கள், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால், கடுமையான உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Explore