கடைகளில் வாங்காமல், நல்ல சுவையான தரமான சிக்கன் 65-ஐ வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள் - 500 கிராம் சிக்கன், 1 ஸ்பூன் கடலை மாவு, 1 1/2 ஸ்பூன் கார்ன் ப்ளார், 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 முட்டை,
1 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், 1 1/2 ஸ்பூன் மல்லித்தூள், 1 ஸ்பூன் கரம் மசாலா, 2 ஸ்பூன் தயிர், தேவையான அளவு உப்பு & பொரிக்க எண்ணெய்.
கோழிக்கறியை கழுவி, மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் (கார்ன் ப்ளார் தவிர்த்து) சேர்த்து பிசைந்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
1 மணி நேரம் கழித்து, கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனை நன்கு சூடாக்க வேண்டும்.
எண்ணெய் காய்வதற்குள், மசாலா பொருட்கள் ஊறிய கோழிக்கறியில் கார்ன் ப்ளாரை சேர்த்து பிசைய வேண்டும். சிக்கன் 65 செய்யும்போது, கார்ன் ப்ளாரை இறுதியில்தான் சேர்க்க வேண்டும்.
இப்போது, காய்ந்த எண்ணெய்யில் கோழிக்கறியை போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் சாஃப்டான பெர்ஃபெக்டான சிக்கன் 65 தயார்.
இதன்மீது, லேசாக எலுமிச்சை சாறு பிழிந்து, தேவைப்பட்டால், எண்ணெய்யில் பொரித்த கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்து பரிமாறலாம்.
Explore