பீட்சா என்பது ஆரோக்கியமான உணவு அல்ல. ஆனால், தென்னிந்திய ஃபியூஷனான பீட்சா தோசை மிகவும் ஆரோக்கியமானது.
பீட்சா தோசைக்கு, தோசை மாவு, தக்காளி சாஸ், சீஸ், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகிய பொருட்கள் மட்டும் போதும்.
செய்முறை : வழக்கமாக தோசை ஊற்றுவதைபோல அடுப்பில் தோசைக்கல் வைத்து அது காய்ந்ததும் தோசை மாவை ஊற்றவேண்டும்.
தோசை மாவை மெல்லிதாக ஊற்றாமல், சற்று அடர்த்தியாக ஊற்ற வேண்டும். அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்.
மாவின் மேல் தக்காளி சாஸ் தடவி, லேசாக சீஸை போட்டு, அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பரவலாக தூவ வேண்டும்.
காய்கறி கலவைகளுக்கு பின்னர் இறுதியாக, துறுவிய சீஸை ஒரு கைப்படி அளவு எடுத்து தோசை முழுவதுக்கும் தூவி, அதனை மூடிவைத்து வேகவிடவும்.
சீஸ் உருகி டாப்பிங்ஸ் வெந்ததும் இறக்கி பரிமாறவும். பீட்சா தோசை ரெடி. சாப்பிடுவதற்கு நிச்சயம் பீட்சா போலவே இருக்கும்.
Explore