எலிகளின் செல்கள் மனித செல்களுடன் சரியாகப் பொருந்தக்கூடியவை. எனவேதான் மனிதனுக்கு தேவையானவற்றை முதலில் எலிகளின் மீது சோதித்துப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.
சர்க்கரை நோய் குறித்து ஹைதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் நிலைய ஆராய்ச்சியாளர்கள், அண்மையில் சில எலிகள் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை 100 மில்லி லிட்டர் அளவுக்கு சர்க்கரை கலந்த, மக்கள் பருகும் வகையிலான காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து 2 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து எலிகளுக்கும் உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவன ஆய்வு மூலம் உலகளாவிய உணவு முறை தளர்வுகளுடன் ஒப்பிடப்பட்டன.
அதில், டீ, காபியிலுள்ள சுக்ரோஸ் கல்லீரல் தசைகள் மற்றும் குடல்களில் கடும் விளைவுகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.
எனேவ, ஒரு நாளைக்கு 2 வேளை சர்க்கரை போட்டு டீ., காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டீ, காபி பிரியர்கள், சர்க்கரை இல்லாத டீ, காபி குடிக்க முயற்சி செய்யுங்கள் என்றும், குளிர்பானங்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் என்றும் ஆராச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Explore