இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தமன்னா பாட்டியா இருக்கிறார்.
'பாகுபலி' முதல் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வரை, தனது நடிப்பாலும், அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
கேரக்டருக்கு தேவையான கவர்ச்சியில் நடித்துவந்த தமன்னா, அண்மைக்காலமாக படுகவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
"முத்தக் காட்சிகளுக்கு நோ" சொல்லிவந்த தமன்னா, அந்தக் கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தி, முத்தத்திற்கு ஓகே சொல்லியுள்ளார்.
தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டதால், சவாலான பல கதாபாத்திரங்களையும், அழுத்தமான பல படங்களையும் தவறவிட்டதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
எனவே தனக்குத்தானே விதித்துக்கொண்ட "நோ கிஸ்" என்கிற கட்டுப்பாடுகளை இப்போது தளர்த்திக்கொண்டுள்ளாராம்.
சினிமாவுக்கு புதிதாக வரும் நடிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள தமன்னா, கவனமாக இருங்கள்.. தயாராக இருங்கள்.. வாய்ப்புகள், சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வரக்கூடும் என்று கூறியுள்ளார்.
தனக்கு வாய்ப்புகள் வந்தபோது, தான் எப்போதுமே தயாராக இருந்தது இல்லை என்றும், ஆனால் தைரியமாக, துணிச்சலாக அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.