லலிதா, பத்மினி, ராகினி: திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்படுவர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார்கள்.
கல்பனா, ஊர்வசி, கலாரஞ்சினி: இவர்கள் மூவரும்கூட கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த சகோதரிகளில் ஊர்வசி, அதிக படங்களில் நடித்தார்.
ஜோதி லட்சுமி - ஜெயமாலினி: கவர்ச்சி நாயகிகளாக 80களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கோலோச்சினர்.
அம்பிகா – ராதா: தமிழ் சினிமாவில் 80-களில் இவர்களின் ராஜ்ஜியம்தான்.
டிஸ்கோ சாந்தி – லலிதா குமாரி: நடிகர் ஆனந்தனின் மகள்களான இவர்களில், டிஸ்கோ சாந்தி கவர்ச்சி நடிகையானார். லலிதாகுமாரி காமெடி நடிகையாக நடித்தார்.
சிம்ரன் - மோனல்: தமிழ் சினிமாவில் இன்றும் கலக்கிக்கொண்டிருக்கிறார் சிம்ரன். இவரது சகோதரி மோனல் சில படங்களில் நடித்து பிரபலமானார்.
நக்மா - ஜோதிகா: தமிழ் சினிமாவை கலக்கிய சகோதரிகள் இவர்கள். இதில் ஜோதிகா தமிழ்நாட்டு சூர்யாவை மணந்து செட்டில் ஆகிவிட்டார்.
காஜல் அகர்வால் - நிஷா அகர்வால்: அகர்வால் சகோதரிகள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவர்களில் காஜல் அகர்வால் ஃபேமஸ் நடிகை.
ஷாலினி – ஷாம்லி: இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகினர். இதில் அஜீத்தை திருமணம் செய்துகொண்டு ஷாலினி செட்டிலாகிவிட்டார்.
Explore