ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி, அதன் ஆரம்பகட்ட சோதனைகளில் 100% வெற்றி அடைந்துள்ளதாம்.
குடல் சார்ந்த புற்று நோய்களை இந்த தடுப்பூசி முழுமையாக குணமாக்கும் என்பதால், ‘என்ட்ரோமிக்ஸ்’ (Enteromix) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. (ENTERO - குடல்)
கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கேன்சர் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
mRNA அடிப்படையிலான இந்தத் தடுப்பூசி, புற்று கட்டியின் அளவைக் குறைப்பதிலும், நோயின் வளர்ச்சியை குறைப்பதிலும் குறிப்பிடத்தக்க முடிவுகளைக் காட்டியுள்ளது.
ஒவ்வொரு நோயாளிக்கும், அவர்களின் தனிப்பட்ட RNA-வுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி மிக எளிதாக குறைந்த நேரத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுமாம்.
கீமோதெரபி & கதிர்வீச்சு சிகிச்சைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் நிலையில், இந்தத் தடுப்பூசி, சோதனையில் பங்கேற்ற நோயாளிகளுக்கு எவ்வித பக்கவிளைவையும் ஏற்படுத்தவில்லை.
‘என்ட்ரோமிக்ஸ்’ தடுப்பூசி, புற்றுநோய் கட்டிகளை அழிப்பதற்கான 4 பாதிப்பில்லாத வைரஸ்களைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
ரஷ்யாவின் இந்த கேன்சர் தடுப்பூசி இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.