90 காலகட்டத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகியாக திகழ்ந்தவர் நடிகை சங்கவி.
தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த அமராவதி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நாட்டாமை உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், 2008-ம் ஆண்டிலிருந்து சினிமா பக்கமே சங்கவி தலைகாட்டவில்லை.
நீண்ட இளைவெளிக்குப் பின் 2019-ம் ஆண்டு சங்கவி நடிப்பில் கொளஞ்சி என்ற படம் வெளியானது. அதன்பின் சங்கவி நடிக்கவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட சங்கவிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை சங்கவி அண்மையில் வெளியிட்டிருந்தார்.
2025 அக்டோபர் 4-ல், 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகை சங்கவி...
Explore