இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும்போது, இஞ்சியை விட பூண்டு சற்று கூடுதலாக போட்டால், செய்யும் டிஷ் சுவையாக இருக்கும்.
இட்லி மாவு புளிக்காமல் இருக்கு, சிறிய வாழைத்தண்டை மாவில் போட்டு வைக்கவும்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது, தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால், ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
உப்புக் கரைத்த நீரில் தக்காளியை போட்டு வைத்தால், சீக்கிரம் அழுகாது.
கீரையை வேகவைக்கும் போது சிறிது எள் சேர்த்து வேகவைத்தால், கீரை பச்சை நிறம் மாறாமல் இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.
தயிரில் சிறிய தேங்காய் துண்டை போட்டுவைத்தால், தயிர் சீக்கிரம் கெட்டுப்போகாது.
ரவா தோசை சுடும்போது, மாவில் 2 தேக்கரண்டி கடலை மாவை சேர்த்து செய்தால், தோசை மொறு மொறுவென வரும்.
ஊறுகாய் செய்யும்போது, உப்பை லேசாக வறுத்துப்போட்டால், ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
Explore