நன்கு தூங்கி எழுந்த பின்பும், நன்கு ஓய்வெடுத்த பின்பும்கூட சோர்வாகவே இருத்தல்.
வழக்கமான சரும நிறத்திற்கு பதிலாக, சருமம் வெளிர்ந்து காணப்படுதல்.
தொடர்ந்து பலவீனமாக இருத்தல் மற்றும் ஆற்றல் குறைந்தது போல உணர்தல்.
மூளைக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் இல்லாமல் தலைவலி ஏற்படுதல்.
மூளைக்கான இரத்தம் ஓட்டம் குறைந்து அவ்வப்போது தலைசுற்றல் ஏற்படுதல்.
உள்ளங்கையும் உள்ளங்காலும் எப்போதும் குளிர்ந்து காணப்படுதல்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் குறைபாட்டினை சரிசெய்யலாம்.
இறைச்சிகள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், கீரைகள், பேரீச்சம்பழம், உலர் கொட்டைகள் மற்றும் பழங்களை உட்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக அதிகரிக்கலாம்.