டீ போடுவதெல்லாம் ஒரு மேட்டரா? என கேள்வி கேட்கும் பலர் வைக்கும் டீயை, குடிக்க சகிக்காது. சிலர் போடும் டீ அருமையாக இருக்கும்.
தேநீர் கடை சுவையில் பெர்ஃபெக்ட் டீ வைப்பது எப்படி? என பார்க்கலாம். மசாலா பொருட்கள் சேர்க்காமல், அடிப்படை டீ வைக்க...
தண்ணீர் - 3/4 டம்ளர், டீத்தூள் - 2 டீஸ்பூன், பால் - 2 டம்ளர் மற்றும் தேவைக்கு ஏற்ப சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்.
செய்முறை : அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3/4 டம்ளர் நீரை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் 2 டீஸ்பூன் டீத்தூளை சேர்த்து, நீர், 1/4 டம்ளராக சுண்டும் அளவுக்கு கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அதில், தண்ணீர் அதிகம் சேர்க்காமல் காய்ச்சிய பாலை 2 டம்ளர் ஊற்றி, 3 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அடுப்பை அணைத்து இறுதியாக, தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து கலக்கினால் டீக்கடை டீ தயார்.
மசாலா டீ வேண்டும் என்பவர்கள், ஆரம்பத்தில் நீரை கொதிக்க வைக்கும்போதே, ஏலக்காய், இஞ்சி போன்றவற்றை தட்டி போட்டுக்கொள்ளலாம்.
Explore