தினமும் 15 முதல் 18 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில்தான் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை முதலில் வைக்கப்பட்டது.
ஏப்ரல் 27, 1918ல் தொடங்கப்பட்ட 'மெட்ராஸ் லேபர் யூனியன்'தான் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு.
இதையடுத்து தொழிலாளர்களின் உரிமையை ஒருங்கிணைந்து கேட்கும் முறை 1918ல் இருந்து இந்தியாவில் உருவானது.
ஜூலை 1922ல் மெட்ராஸ் அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தை கம்யூனிச சிந்தனை காங்கிரஸ்வாதியான சிங்காரவேலர் வழிநடத்தினார்.
அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இனி தொழிலாளர் நலனில் காங்கிரஸ் அதிகவனம் செலுத்த வேண்டுமென பேசினார் சிங்காரவேலர்.
மே 1923ல் இந்தியாவில் மே தினம் கொண்டாட வேண்டும் என்று சிங்காரவேலர் தலைமையில் முடிவு செய்யப்பட்டு சென்னையில்தான் முதலில் கொண்டாடப்பட்டது.
மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவும், தோழர் சிங்காரவேலர் தலைமையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் பிறகுதான் மே தின கொண்டாட்டம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு (பம்பாய், பஞ்சாப், வங்காளம்) பரவியது.
Explore