ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சமீபத்திய அதிசய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் கேன்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் 263 பழமையான விண்மீன் திரள்களை ஆய்வு செய்தனர்.
இந்த விண்மீன் திரள்கள், பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை.
ஆராய்ச்சி முடிவில், இந்த விண்மீன் திரள்களில் சுமார் 60 சதவீதம், கடிகார சுழற்சி போல(clockwise) ஒரே திசையில் சுழல்வதைக் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை, இந்த விண்மீன் திரள்களின் சுழற்சி சீரற்ற திசையில் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பியிருந்த நிலையில், தற்போதைய ஆய்வு முடிவு அதிர்ச்சி அளித்துள்ளது.
இதனால் பிரபஞ்சம், ஒரு மாபெரும் கருந்துளைக்கு உள்ளே இருக்கக்கூடும் என்றும், இதற்கு பின்னால் மாபெரும் சக்தி இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்று உண்மையாக இருந்தால், பிரபஞ்சம் பற்றி தற்போது நிலவும் கருத்துகளை, மீண்டும் திருத்தி எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்.