ஆண்டுதோறும் செப்டம்பர் 26, உலக கருத்தடை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு கருத்தடை முறைகளிலுள்ள பல்வேறு வகைகள் குறித்து பார்ப்போம்.
கருத்தடை ஊசி: மருத்துவரின் பரிந்துரைப்படி 3 மாதங்களுக்கு ஒரு முறை கருத்தடை ஊசியை பெண்கள் போட்டுக் கொள்ளலாம். ஆனால் இதை வருடக்கணக்கில் பயன்படுத்தினால் எலும்புகள் பலவீனப்படும்.
கருத்தடை கிரீம்கள்: உடலுறவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் கருத்தடை கிரீம்களை தடவினால், ஆண்களின் விந்தணுக்கள் அழிந்துவிடுமாம்.
ஆணுறை: கருத்தடைக்கு மிகவும் சிறந்த தேர்வாக ஆணுறை உள்ளது. இவை, ஆண், பெண் இருவருக்கும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பாலியல் தொற்றுநோய் உண்டாகாமலும் தடுக்கும்.
பெண்ணுறை: மெல்லிய பொருட்களால் ஆன பெண்ணுறை, யோனிக்குள் செலுத்தப்படக்கூடியது. இது ஆண்களின் விந்தணுக்களை உள்ளே செல்லாமல் தடுக்கும். இது பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
காப்பர் டி: செம்பு கலந்த காப்பர் டி, கர்ப்பப்பைக்குள் பொருத்தப்படும் லூப் போன்ற கருத்தடை சாதனம்.
குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் : பெண்களுக்கு நிரந்தர கருத்தடை செய்யும் அறுவை சிகிச்சை முறை டியூபெக்டமி ஆகும். ஆண்களுக்கான அறுவை சிகிச்சை முறை வாசெக்டமி ஆகும்.